Advertisment

கஞ்சா போதையில் வெறிச்செயல்... 8 பேரை தேடும் காவல்துறை

Ganja-intoxicated rampage... Police looking for 8 people

Advertisment

அண்மைக்காலமாகவே கஞ்சா போதைக்கு இளைஞர்கள் தங்களை அடிமையாக்கி கொண்டு சமூக சீர்கேடுகளில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வாயிலாக பரவி வருகிறது. இந்நிலையில் மதுரையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வலையாங்குளம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் வாகனங்கள் நிறுத்துவதில் கட்டிட தொழிலாளர்களுக்கும் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சுமார் எட்டு பேர் அங்கிருந்த வாகனங்களை தரையில் தள்ளி சேதப்படுத்தியதோடு, கட்டிடத் தொழிலாளர்களையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓடிய கஞ்சா போதை இளைஞர்கள் எட்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

police madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe