பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு

Gangster offender who assaulted journalists; Confusion in the court premises

வேலூர் மாவட்டம் காட்பாடியில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16 -ம் தேதி நள்ளிரவு, தனியார் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த தனியார் மருத்துவமனை (CMC ) பெண் மருத்துவர் மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பர் இருவரையும், பயணிகள் ஆட்டோ என்று கூறி ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வேலூர் பாலாற்றுப் பகுதிக்கு கடத்தி சென்று அங்கு பணம், ரூ 40 ஆயிரம் மற்றும் நகை, செல்போனை ஆகிவற்றை பறித்துக்கொண்டு பெண் மருத்துவரை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பெண் மருத்துவர், ஆன்லைன் மூலமாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல்துறையினர், தனிப்படை அமைத்து 5-பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 13 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், வேலூர் சத்துவாச்சாரி வா.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன்(எ)மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ)மண்டை மற்றும் 17-வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகுஇவர்களில் பார்த்திபன், மணிகண்டன் ( எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ) மண்டை மற்றும் ஒரு சிறுவன் என 5-பேரை வேலூர் மாவட்ட மகிளிர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரு சிறார் சென்னையில் உள்ள கெலீஸ் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இவர்கள் 4-பேருக்கு 2022 ஏப்ரல் 15-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட பார்த்திபன், மணிகண்டன் (எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கைமகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 2-ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்தியா ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் 4-பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை தலா 25 ஆயிரம் அபராதம் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா தீர்ப்பு வழங்கினார்.

police Vellore
இதையும் படியுங்கள்
Subscribe