/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_262.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் கௌசிக் என்பவருக்கு சொந்தமாக பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கணக்காளராக ஜோன்றம்பள்ளி பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித்குமார், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த பரத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முழுவதும் நகை கடையில்விற்பனையான பணம் 60 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு புதுப்பேட்டை ரோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள எச்டிஎப்சி வங்கியில் செலுத்த சென்று கொண்டிருந்தனர். அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள பூஞ்சோலை மெடிக்கல் அருகே அஜித் குமார் மற்றும் பரத் ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை பறிக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் சுதாரித்துக் கொண்ட இருவரும் பணத்தை இறுக்க பிடித்துக் கொண்டனர்.இதன் காரணமாக அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவியதன்காரணமாக அஜித்குமார் மற்றும் பரத் ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)