Advertisment

பிரபல விடுதியின் கணக்காளரிடம் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்!

 gang is threatening to demand money from the accountant of a famous hotel

வேலூரை சேர்ந்தவர் சுதாகர். திமுக பிரமுகரான இவர் மாநகராட்சியின் 24வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏவிஎம் என்ற பெயரில் தங்கு விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியின் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இரண்டு பேர் இறங்கினர். அதில் ஒருவர் தங்கும் விடுதியின் உள்ளே வந்து விடுதியின் கேசியரிடம், ஓனர் சுதாகர் எங்கே என கேட்டுள்ளார். நீங்கள் யார் எனக் கேட்டதற்கு, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிவிட்டு, எங்களுக்கு பணம் வேணும் எனக் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

Advertisment

அவர் பணம் இல்லை எனச் சொன்னதும் மேலும் தவறான வார்த்தைகளில் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கே பணியாற்றியவர்கள்அங்கே வந்துள்ளனர்.அப்படி வந்தவர்களையும் மிரட்டல் விடுத்துஅங்கிருந்து வெளியே சென்றுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வந்தவர்கள் யார்?, எதற்காக இவரின் விடுதியை குறிவைத்து பணம் கேட்டார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment
Vellore police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe