தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அத்தை கொண்டான் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா. இவரது கணவர் தாமோதர கண்ணன்.வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால்லாவண்யா அவருடைய அம்மாவுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில்லாவண்யா வீட்டிற்கு எதிர் வீட்டில்கடந்த சில நாட்களுக்கு முன்புகோழிகள் திருடு போய் உள்ளது. அப்போதுஎதிர் வீட்டில் வசிப்பவர்கள் ‘லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தால்யார் குற்றவாளிகள் என்பது தெரிய வரும்.’ என்று லாவண்யாவிடம் சிசிடிவி காட்சிகளைக் கேட்டுள்ளனர். அதற்குலாவண்யாவும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சிசிடிவி காட்சிகளைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாககோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்தீபாவளி தினத்தன்று லாவண்யா வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள்வீட்டு வாசலில் பட்டாசுகளை வெடிக்க வைத்துரகளையில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யா மற்றும் அவரது அம்மாவைஅங்கிருந்த மர்மநபர்கள்அரிவாளால் தாக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்துலாவண்யா அந்த மர்ம நபர்களை துடைப்பக் கட்டையால் தாக்க முயற்சித்திருக்கிறார்.
மேலும் ஆத்திரமடைந்துவீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறிஉள்ளே வந்த மர்ம நபர்கள்கார் மீது குதித்துஅரிவாளைக்காட்டிக் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்துகோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில்லாவண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளைத்தேடி வந்தனர். இது தொடர்பாகமகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.