Skip to main content

‘செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்’ ; நில உரிமையாளருக்கு நூதன முறையில் எச்சரிக்கை விடுத்த திருட்டு கும்பல்!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
A gang of thieves warned the landlord in a strange way

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது S.குளத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் குமரவேல். இவருக்கு அதே கிராமத்தில் ஐந்து ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவருடைய விவசாய நிலத்தில் தென்னைமரம், பலாமரம், வாழை மரம், கொய்யா மரம் ஆகிய மரங்களும் உள்ளன.

இந்நிலையில், குமரவேல் தன்னுடைய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை சாதுரியமாக நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், குமரவேல் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இவரது விவசாய நிலத்திற்கு சென்று இரவோடு இரவாக தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து சத்தம் கேட்காதவாறு அதனை கயிறு மூலம் கீழே இறக்கி வெட்டி மகிழ்ச்சியுடன் குடித்துள்ளனர்.

இதனையடுத்து, நில உரிமையாளர் குமரவேல் இன்று (12-06-24) அதிகாலை தன்னுடைய விவசாய நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்த இளநீர் திருடுபோய் உள்ளது தெரியவந்தது.  இதையடுத்து, புளிய மரத்தின் அருகில் கால்நடை கட்ட சென்ற குமரவேல் புளிய மரத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். அங்கு, நீல நிறத்தில் சார்ட் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து பெருமூச்சுட்டுள்ளார் அந்தச் சாட் அட்டையில், ‘இது எங்களுடைய 128 - வது இளநீர் வேட்டை. முக்கிய குறிப்பு; தீர விசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும் மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி!!! 

A gang of thieves warned the landlord in a strange way

இப்படிக்கு “ஓம் சக்தி ஆதிபராசக்தி, ஸோசோத்திரம் ஆண்டவரே, லு.கா82 வது அதிகாரம் , எல்லாப் புகயும் இறைவனுக்கே அல்லா”. மேலும் வேண்டுகோள்; செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், ‘எச்சரிக்கை:-எங்களை கண்டுபிடிக்க இயலாது’ எனக் குறிப்பிட்டு பெரிய நாமத்தைப் போட்டுவிட்டு நகரம் படம் வடிவேல் பாணியில் நூதன  முறையில் திருடி இளநீரை வேட்டையாடி குடித்துவிட்டு அங்கிருந்து மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றுள்ளனர். யார் இந்த வேலையை பார்த்திருப்பார்கள் என தெரியாமல் கிராமமே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரூ.11 லட்சம் மதிப்பிலான பணத்தால் சுவாமிக்கு அலங்காரம்; ஆச்சர்யமடைந்த பக்தர்கள்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Swami was decorated with money worth Rs.11 lakh

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவிலில் இன்று மாலை வாராகி அம்மனுக்கு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பதினோரு லட்சம் மதிப்பிலான பணத்தாலும் நகைகளாலும் அம்மன் சிலை முழுவதும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்து விளக்கு ஏற்றியும் வாழை இலையில் அரிசி தேங்காய் மஞ்சள் வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து தீபம் ஏற்றப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சிறப்பு விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்.

10 நாட்களுக்குள் நினைத்த காரியங்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும் என்றும், ஜாதக ரீதியான தோஷங்கள் தொழில் பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் கண் திருஷ்டி குழந்தை இல்லாத தம்பிகளுக்கு ஒரு குழந்தை கிடைக்கும் கடன் பிரச்சினை தீரும் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தப் பூஜையில் மந்திரங்கள் முழங்க அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Next Story

விஷ சாராய மரண வழக்கு; தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Kallakurichi Dt Karunapuram incident The court ordered TN govt

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் இன்பதுரை, பாமக சார்பில் கே.பாலு, பாஜக சார்பில் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது தொடர்பாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சித்திக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில், “புதிதாக மேலும் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப்பதிவு பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கால தாமதம் செய்யாமல் விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிக்கை மற்றும் பதில் மனுக்களை தமிழக அரசு அளிக்க  வேண்டும்” என உத்தரவிட்டனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் (ஜுலை 18) அன்று விசாரிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.