திருப்பத்தூர் மாவட்டம்நாட்றம்பள்ளிஅருகே தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இது தொடர்பாக இரு மாநிலபோலீசாருக்குதகவல் சென்றாலும் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் எந்த நடவடிக்கையும்எடுக்காமல் இருந்ததாகவும்கூறப்படுகிறது. சிலமுறைரெய்டுசென்றாலும் முன்கூட்டியே தகவல் தெரிந்து தப்பிவிடுவது வழக்கம்.
இதுகுறித்து வேலூர் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில்போலீசார்ஜீலை1 ஆம் தேதி அதிரடியாக அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போதுஅங்குசாராயம் காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த 4000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் மூன்று அடுப்புகள், 200 லிட்டர் கள்ளச்சாராயம்கடத்துவதற்குதயார் நிலையில் வைத்திருந்தகேன்களைபறிமுதல் செய்தனர்.
போலீசார்வருவதைபார்த்ததும் அங்கிருந்து மூவர் தப்பி ஓடுவதைபோலீசார்பார்த்துள்ளனர்.அவர்களைபிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. சாராயம் காய்ச்சுகிறார்கள் எனத்தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மது விலக்கு அமலாக்கப் பிரிவுபோலீசார்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்எனக்கோரிக்கை விடுக்கின்றனர் வாணியம்பாடி மக்கள்.