Advertisment

காரில் ஆடு திருடிய கும்பல்... பதற்றத்தில் விபத்து

A gang stole a goat from a car.. An accident in tension

Advertisment

காரில் ஆடு திருடிய கும்பலை ஆட்டின் உரிமையாளர் பைக்கில் துரத்தியதால் பதற்றத்தில் கார் விபத்துக்குள்ளாகி, ஆடு திருடியவர்கள் காரை விட்டு இறங்கி ஓடிய சம்பவம் அரியலூரில் நிகழ்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் திடீரென அவரது ஆடுகள் வண்டியில் ஏற்றப்படுவது போன்று சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சிலர் ஆடுகளை காரில் ஏற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டு சென்றனர். இதனைப் பார்த்து அதிர்ந்த ரங்கசாமி இருசக்கர வாகனத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு காரை துரத்திக் கொண்டு சென்றார். அப்பொழுது திடீரென பதற்றத்தில் திருடர்கள் காரை சுவற்றில் மோதி விபத்தை ஏற்படுத்தினர். உடனே காரில் இருந்த ஆடு திருடிய நபர்கள் இறங்கி ஓடி விட்டனர். இது தொடர்பாக ரங்கசாமி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காரை கைப்பற்றினர். ஆடு திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ariyalur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe