Advertisment

ரூ.4 லட்சத்திற்கு கைமாறிய பெண் குழந்தை; அதிரவைக்கும் சம்பவம்!

gang sold the baby girl for Rs 4 lakh

ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதி சேர்ந்தவர் நித்யா(28). தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு எடிசன் என்பவருடன் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து நித்யா, ஈரோடு மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவர் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

Advertisment

இதன்மூலம் கர்ப்பமடைந்த நித்யாவுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வேண்டாம் என முடிவு செய்த நித்யா மற்றும் சந்தோஷ்குமார் குழந்தையை விற்க முடிவு செய்து பவானி, லட்சுமி நகரை சேர்ந்த சித்திகா பானு, ஈரோடு பெரிய சேமூர் பகுதி சேர்ந்த செல்வி மற்றும் அவருடன் இருந்த இரண்டு ஆண்களிடம் குழந்தை கொடுத்துள்ளார். அப்போது 4.50 லட்சம் ரூபாய் கைமாறியது. இந்த கொடுக்கல் வாங்கல் விவகாரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்துள்ளது. இதில் ரூ. 1.30 லட்சத்தை எடுத்துக் கொண்ட செல்வி மீதி பணத்தை சந்தோஷ் குமாரிடம் கொடுத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஈரோட்டுக்கு வந்த நித்யாவை அவரது சொந்த ஊருக்கு செல்லுமாறு சந்தோஷ் குமார் கூற இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனக்கு பணம் வேண்டாம். குழந்தை தான் வேண்டும் என்று நித்யா கூறியதால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நடந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் நித்யா தெரிவித்தார். பின்னர் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார் பெண் குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட செல்வி, சித்திக்கா பானு, ராதா, ரேவதி, சந்தோஷ் குமார் என 5 பேரைக் கைது செய்தனர்.

குழந்தையை விற்ற வழக்கில் நித்யாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தையை விலைக்கு வாங்கிய நாகர்கோவில் தம்பதிகள் மற்றும் அதற்கு உதவியாக இருந்த இரண்டு புரோக்கர்களை பிடித்து விசாரிக்க ஈரோடு போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் முழுமையான தகவல் தெரிய வரும். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதைப்போல் கைது செய்யப்பட்டுள்ள 4 பெண் புரோக்கர்கள் இதேபோன்று வேறு ஏதும் குழந்தைகளைப் பெற்று உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

child Erode police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe