Advertisment

பண்டிகையில் குறிவைக்கும் திருட்டு கும்பல் உஷார்... உஷார்... உஷார்...

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் டவுனில் ராம்மோகன் என்பவர் பேன், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், பீரோ, கட்டில் கடை நடத்திவருகிறார். இவரது கடையில் விலைஉயர்ந்த டிவி வாங்க வந்ததுபோல் நடித்து இரண்டுபெண்கள் ஒரு ஆண் ஆகிய மூன்று பேர் ஒரு டிவியையே பட்ட பகலில் திருடிக் கொண்டுபோயுள்ளனர். கடை ஊழியர் ஒரு டிவியை காணோம் என்று சொல்ல அந்த மூன்று பேர்கள் மீது சந்தேகம் வந்தது. ஓடிப்போய் பெண்ணாடம் போலிசில் புகார் கொடுத்தார் ராம்மோகன் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு எஸ்.ஐ. கோபாலகிருஷ்ணன், கடையில் இருந்த கண்காணிப்புகாமிரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு மேற்படி மூவரையும் அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் மூவரும் அரியலூர் மாவட்டம் தண்டலை கிராமத்தை சேர்ந்த சங்கர், கல்பனா, கற்பகம் ஆகிய மூவரையும் கைது செய்து டிவியையும் கைப்பற்றினார்கள்.

Advertisment

robbery

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இவர்கள் மட்டுமல்ல இதே ஊரைச் சேர்ந்த பலர் இதேபோல் ஷோரூம் கடைகள், நகைகடைகள், ஜவுளிகடைகளில் திருடுவது கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்களில் கூட்டம் கூட்டமாக சென்று பெண்களின் தாலி செயின்களை பறிப்பது, வங்கி வாசலில் நின்று பணம் எடுத்துவருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணம் எடுப்பது, பஸ்சில் ஏறி பெண்கள் ஆண்கள் என பலரிடமும் பிக்பாக்கெட் அடிப்பது என இதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக இவர்களில் ஆண்கள் பெண்கள் என பலரும் செய்கிறார்கள். திருடிய பொருளை உடனடியாக ஆள் மாறிமாறி அனுப்பிவிடுவார்கள். திருடியவர்கள் என்று சம்பந்தப்பட்ட ஆளை பிடித்து சோதனைபோட்டாலும் பொருள் இருக்காது. அது மாறிமாறி போய்விடும் பஸ்சிலும் இதேபோல் தான் நடக்கும்.

robbery

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இப்படி திருடிய பொருட்களை இவர்கள் தங்கள் ஊருக்கு கொண்டுபோய் சேமித்து வைத்து விலைக்குறைவாக விற்பார்கள் பலரும் தங்கள் குடும்ப திருமணம் போன்ற காரியங்களுக்கு இவர்களிடம் பொருட்கள் வந்து வாங்கி செல்கிறார்கள். இப்படி திருடுவது தவறு என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் திருட்டு தொழிலை கச்சிதமாக செய்து வருகிறார்கள். இவர்கள் மீது தமிழகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. திருடி மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு போவதும், திரும்பி வந்து மீண்டும் அதே தொழிலை செய்வதும் இவர்களுக்கு சர்வசாதாரணமான ஒன்று. இவர்கள் திருடும் மாடலை வைத்தே போலீஸ் கண்டு பிடித்துவிடும் ஊருக்கே சென்று கைது செய்து பொருட்களை கைப்பற்றுவது என்று அடிக்கடி நடக்கும்.

இதேபோல் திருச்சி ராம்ஜி நகரில் குடும்பத்தினர்களோடு கும்பாலாக சென்று திருடுபவர்களும் நிறைய உள்ளனர். ஒருமுறை திட்டக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகத்தில்போது மக்கள் கூட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களின் தாலி சரடு, செயின் அறுக்கப்பட்டது. சுமார் 100 பவுன் இதை திட்டக்குடி போலீசார் சவாலாக விசாரணை செய்து ராம்ஜி ஆட்களிடம் பரிமுதல் செய்து பரிகொடுத்த பெண்களிடம் நீதிமன்றம் மூலம் ஒப்படைத்த வரலாறும் உண்டு. இந்த திருட்டுக்கள் அதிக அளவில் நடக்கும் எப்போது தெரியுமா தீபாவளி பொங்கள் போன்ற விசேஷநாட்களில்தான். கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்சிலும் சரி, கடைகளிலும் சரி திருடிவிட்டு எளிதில் தப்பிவிடமுடியும் என்பதால் விழாக்காலங்களை தேர்வு செய்கிறார்கள்.

இந்த திருட்டுகும்பலை திருந்தி வாழவைக்க பல காவல்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தும் முடியவில்லை என்கிறார்கள் காவல்துறையினர். பணத்தை, நகையை, பொருட்களை பரிகொடுத்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள். திருடியவர்களை சாபமிடுவார்கள் போலீஸ் புடிக்குமே சிறைக்கு போகனுமே என்று கவலைப்படாமல் திருடுவது எங்கள் குல தொழில் என்பதுபோல் திருடி வருகிறார்கள். அந்த காலத்தில் வழிப்பறி கும்பல் தீ வட்டி வெளிச்சத்தில் ஊர் புகுந்து திருடும் கும்பல் என பல இருந்தன. காலங்கள் மாறிநாகரீகம் விஞ்ஞான வளர்ச்சி என வந்தாலும் திருடும் கும்பலும் அதற்கு ஏற்றவாறு தங்கள் திருட்டு வழிமுறைகளையும் மாற்றி கொண்டு திருடுகிறார்கள். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு.

Cuddalore police Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe