Advertisment

மசாஜ் சென்டரில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்!

Gang involved in robbery at massage center

Advertisment

சென்னை அருகே மசாஜ் சென்டரில் புகுந்த கும்பல் ஒன்று பட்டா கத்தியால் தாக்கி பணம், நகை, செல்ஃபோன்கள் ஆகியவற்றை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் பட்டப்பகலில் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டு, ரூபாய் 30,000 ரொக்கம், 5 சவரன் நகை, 7 செல்ஃபோன்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. காவல்துறையில் புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாகவும், அவர்கள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

கொள்ளை சம்பவத்தில் காயமடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் புகார் அளித்ததையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து ஒருவரைப் பிடித்துள்ளனர். மற்றவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

CCTV footage Massage center
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe