Gang incident of school girl; 5 people arrested

சேலம் அருகே 14 வயது பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள வினித் என்ற நபர் காதலிப்பதாகக் கூறி ஆசைகாட்டி உள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்ற வினீத் அவருடைய நண்பர்கள் அருண்குமார், ஆகாஷ், விக்னேஷ், சீனிவாசன் ஆகிய நான்கு பேரை வரவழைத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர்.

Advertisment

வீடு திரும்பிய சிறுமி இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஐந்து பேரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.