Advertisment

மட்டை உரிக்கும் முதியவரை கொலை செய்த கும்பல்

gang incident oldman in vellore

Advertisment

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே லத்தேரி கிராமத்தில் வசிக்கும் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளி செல்வம். லத்தேரி கலைஞர் நகர் பகுதியில் உள்ள அவருடைய மகள் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி விடியற்காலை 4.15 மணிக்கு லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர்.

விடியற்காலை டீ குடிக்க வந்த சிலர் இதைப்பார்த்துவிட்டு லத்தேரி காவல் நிலையத்துக்கு தகவல் தந்துள்ளனர். காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாதாரண தேங்காய் உரிக்கும் தொழிலாளியை கொலை செய்ய வேண்டிய அவசியமென்ன? கொலைக்கான காரணம்? சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா ? குடும்ப பிரச்சனையா? வேறொரு ஏதாவது காரணமா என உறவினர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe