Gang that has a habit of stealing, Police arrested in action

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரசன்குடி கிராமம். இந்தக்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி. இவர் விவசாய தொழில் மற்றும் அதனுடன் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்துவருகிறார். சமீபத்தில் இவர் தனது வயலில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளைச் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 15 ஆடுகளைக் காணவில்லை. இதுகுறித்து சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

Advertisment

அதில் விநாயகமூர்த்தியின் வயலுக்குப் பக்கத்து வயலில் வேலை செய்தவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் மூவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த், பிரவீன்குமார், இளங்கோவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விவசாய வேலை செய்வதுபோல் வெளியூர்களுக்குச் சென்று, அப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்வதையும் அவை இரவு நேரங்களில் அடைக்கப்பட்டிருக்கும் பட்டிகளையும் நோட்டம் பார்ப்பதைவழக்கமாக வைத்துள்ளனர்.

பிறகு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் டாட்டா ஏசி வாகனங்களில் ஆடு, மாடுகளைக் கடத்திச் செல்வது இவர்களது தொழிலாக இருந்துள்ளது. இதன்படி அரசன்குடி கிராமத்தில் விநாயகமூர்த்தி ஆடுகளைத் திருடிய மேற்படி மூவரும் சேலம் மாவட்டம் வெடிகாரன் புதூர் என்ற கிராமத்திற்குகொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள், நான்கு மாடுகள் அவற்றை கடத்திச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisment

அவற்றை ஆடு, மாடுகளைப் பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தனர். ஆடு, மாடு கடத்தலில் ஈடுபட்ட மேற்படி மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சில ஆண்டுகளாகவே வேப்பூர், லக்கூர், தொழுதூர், சிறுபாக்கம்ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் ஆடு, மாடுகளைப் பில்டர்கள் டாட்டா ஏசி வாகனங்களில் கடத்திச் செல்லும் சம்பவம் நடைபெற்றுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,ஆடு, மாடு திருடர்கள் சிலரை சிறுபாக்கம் போலீசார்கைதுசெய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.