The gang that corrupts minors! Police Action!

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிலர் சென்று வருவதை கண்ட போலீசார், அவர்கள் மீது சந்தேகமடைந்து அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

Advertisment

அப்போது முகமது யூசுப்(46) என்பவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து நுாற்றுக்கணக்கான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர் முழுவதும் போதை மாத்திரை சோதனை நடத்த தனிப்படை போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Advertisment

அதன் பேரில் தனிப்படை போலீசார் திருச்சி முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் போதை மாத்திரை விற்ற ஸ்ரீரங்கம் அரவிந்த், வடக்கு காட்டூர் ஷெப்ரீன், கண்டோன்மெண்ட் முடுக்குப்பட்டி நாகராஜ், கார்த்திக்ராஜா, கல்லுகுழி ஜெயராமன், கோகுல், செங்குளம் காலனி பிரவின் ராஜ், ஆகிய 7 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 1500 போதை மாத்திரை, போதை மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பிடிபட்ட 7 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.