திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் பகுதியில் ஒரு ஆட்டோ மற்றும் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனைக்கவனித்த தனிப்படை ரோந்துப் பணி காவல் ஆய்வாளர் சந்திரமோகன்,உதவி ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் அந்த வாகனத்தைச் சோதனை செய்யச் சென்றனர். அப்போது அங்கு மூன்று நபர்கள் இருந்தனர்.
அவர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், வடக்கு காட்டூர் அண்ணா நகரைச் சேர்ந்த கோபால் (29), அரவக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் (59), திருப்பூர் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார், அந்த கார் மற்றும் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனங்களுக்குள் ஐந்து கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. பிறகு அதனை போலீஸார் பறிமுதல் செய்து, அந்த மூவரையும் கைது செய்தனர். மேலும், அந்த இரு வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பிறகு பறிமுதல் செய்த ஐந்து கிலோ கஞ்சா மற்றும் கார், ஆட்டோ ஆகியவற்றுடன் பிடிபட்ட கோபால் (29), ராஜேஷ் (59) சின்னசாமி (50) ஆகிய மூவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.