Advertisment

மீண்டும் அரங்கேறிய கொடூரம்; மாணவனைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்!

gang beaten a class 12 student and urinated on his face

12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கி அவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மருத்துவ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளது. மேலும் அந்த கும்பல் அந்த மாணவனின் முகத்தில் சிறுநீரையும் கழிக்கிறது. அந்த மாணவர் தன்னை விட்டுவிடுங்கள் என்று மன்றாடியும் அவர்கள் தொடர்ந்து தாக்குகின்றனர். இதனை நால்வரில் இரண்டு பேர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில் அந்த வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து மீரட் போலீசார் கூறுகையில், மாணவனை மர்ம கும்பல் தாக்கும் சம்பவம், கடந்த நவம்பர் 12 ஆம் தேதி நடந்தது என்றும், அதில் சம்பந்தப்பட்ட அவி சர்மா, ஆஷிஷ் மாலிக், ராஜன் மற்றும் மோஹித் தாக்கூர் ஆகிய நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் ஆஷிஷ் மாலிக் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் தாக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

meerut police uttrapradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe