Advertisment

போலீஸில் புகார் கொடுத்துவிட்டு லாரி ஓட்டுநரைத் தாக்கிய கும்பல்! 

The gang that attacked the truck driver after reporting it to the police!

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் கீராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சிங்கப்பெருமாள்(55). இவரது மகன் வெங்கடேசன், கடந்த 17ஆம் தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரின் மனைவியை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்த சுரேஷ் துறையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களான முருகேசன், குகன், பாரதி, ராஜா, ஆகியோர் சிங்கபெருமாள் வீட்டிற்கு சென்று அவரை அடித்து தாக்கியதோடு, வீட்டில் இருந்த செல்போன் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதுக்குறித்து சிங்கப்பெருமாள் துறையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe