Advertisment

மெடிக்கல் ஷாப்களில் வலி நிவாரணிகளை திருடி போதை; சிறுவன் உட்பட  மூன்று பேர் கைது

Gang used painkillers as stolen drugs; three arrested, including a boy

இரவு நேரங்களில் மருந்து கடைகளின் பூட்டை உடைத்து வலி நிவாரணி மாத்திரைகளை திருடிச் சென்று போதை மாத்திரையாக பயன்படுத்தி வந்த சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள 'கோர் மருந்தகம்' என்றமருந்து கடையின்பூட்டை உடைத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார் திருவான்மியூரில் மொபைல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்தச் சிறுவன், செம்மஞ்சேரியைசேர்ந்த மணி மற்றும் கண்ணகி நகரைச் சேர்ந்த அப்பு என்ற இருவருடன் பழகி வந்ததாகவும், இவர்கள் இருவரும் மெரினாவில் பகல் நேரங்களில் குதிரை ஓட்டிவிட்டு இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் அழைத்துச் சென்று மருந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் மருந்து கடைகளிலிருந்த வலி நிவாரண மாத்திரைகளைத்திருடி அவற்றை போதை மருந்தாக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

Advertisment

Chennai Medical police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe