
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கருமாரியம்மன் கோவில் காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோடமுயன்றது.
அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமணன்(46), அருண்குமரன்(40), மணிகண்டன்(28), காட்டுராஜா(50), பிரபு (38), சரவணன்(48), குமார்(40), சேட்டு (50) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.6,150 பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
Follow Us