gang of 5 people who were selling cannabis were arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் நகரப் பகுதியில் உள்ள பழனியப்பா தெரு, பள்ளிக்கூட தெரு, நல்லான் குளம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுக்கி கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக தியாகதுருகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் சோதனைக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

அதில், ‘பலராமன் மகன் குமார் கஞ்சா பதுக்கி வைத்து அதனை நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொடுத்து விற்பனை செய்வது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில் ரவி, சீனிவாசன், வல்லரசு, முகமது ஷகில் ஆகிய நான்கு பேரும் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தியாகதுருகம் நகரப் பகுதியில் கஞ்சா பதவிக்கு விற்பனை செய்த ஐந்து பேர் காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.