Advertisment

உத்தரவை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் (படங்கள்)

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி இல்லாத நிலையில் வீடுகளிலேயே கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி மாநிலத்தில்பிரசித்திபெற்றமணக்குளவிநாயகர் கோயிலில் உற்சவமூர்த்தி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமங்கலிநகர்பகுதியில் பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து இளைஞர்கள் வழிபட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் விநாயகர் சிலையை வைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், இந்து முன்னணி அமைப்பினர் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.

Advertisment

அரசின் உத்தரவை மீறி மணலிசின்னசேக்காடுகாந்தி தெருவில் மூன்று ஆயிரம்எவர்சில்வர்டம்ளர் கொண்டு 15 அடி உயரத்தில் மக்கள் வழிபாட்டிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவல்லிக்கேணிதிருவேட்டீஸ்வரர்கோவில் அருகேதடையை மீறி பொது இடத்தில் ஐந்து அடி சிலை வைத்து இந்துமுன்னணியினர்விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். இந்து முன்னணி சார்பில் திருவல்லிக்கேணிமார்க்கெட்அருகே மூன்று அடி சிலை வைத்து வழிபாடு நடத்தினர். புதுப்பேட்டைகோமலீஸ்வரன்கோவில் அருகே இந்து முன்னணி சார்பில் மூன்று அடி சிலை வைத்து வழிபாடு நடத்தினர்.

statue vinayakar sathurthi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe