





Published on 24/09/2023 | Edited on 24/09/2023
தமிழ்நாடு முழுக்க கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டனர். மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட வழிபாடு நடத்தப்பட்டது. அப்படி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சென்னை, பட்டினம்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டது.