Advertisment

இந்தியா முழுவதும் கரோனாவின் தாக்கம் முழுவதுமாக குறையாத நிலையில், நாடு முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாட கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். அந்த வகையில் நாளை (10.09.2021), விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வீடுகளில் பொதுமக்கள், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் சிலைகளைக் கரைக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்குப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகமாக குவிந்தனர். கரோனாவின் பரவல் முழுவதுமாக குறையாத நிலையில், மார்கெட்டில் கடை நடத்தும் அனைத்து வியாபாரிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.