Advertisment

"ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை" - இல.கணேசன் கருத்து...

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரமாக பாஜக தேசிய குழு உறுப்பினர் இல. கணேசன் எம்.பி. இன்று புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் பகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

Advertisment

ganesan about srilankan refugees

இதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "தமிழக பா.ஜ.க. வுக்கு புதிய மாநில தலைவர் யார் என்பது பொங்கலுக்குள் தெரிந்துவிடும். டிசம்பர் இறுதி வாரம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் பாஜக கட்சியில் மாநில தலைவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கமான நடைமுறை. அதன்பிறகு கட்சிக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பா.ஜ.க. ஒரு தனி நபரை நம்பி இயங்குகிற கட்சி அல்ல. இலங்கையில் வாழும் தமிழர்களை இதுவரை இலங்கை தமிழர்கள் என்று சொல்லி வந்தார்கள். தற்போது நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்களை இலங்கை இந்துக்கள் என்று கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை இந்துக்கள்தான்.

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் குடியுரிமை கேட்டால் உறுதியாக தந்தாக வேண்டும். அதுமட்டுமல்ல அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என்றாலும் அதற்கு நான் உடன்படுகிறேன்" என கூறினார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருந்த சட்ட மசோதாவில் தமிழகத்தில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களை பற்றி எதுவும் அறிவிக்காத நிலையில் தமிழக பா.ஜ.க.மூத்த தலைவரான இல.கணேசன் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறுவது பா.ஜ.க.வின் இரட்டை முகத்தை காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

caa La.Ganesan
இதையும் படியுங்கள்
Subscribe