Advertisment

கோயம்பேடுவை அடுத்து திருச்சி ஜி.கார்னர் காய்கறி சந்தை கரோனா பரவும் மையமா?

g

திருச்சி மொத்த காய்கறி மார்க்கெட், காந்தி மார்க்கெட்டில் இருந்து, பால்பண்ணை பைபாஸ் ரோடு பகுதிக்கு ஏற்கனவே மாறியது. பின், கரோனா பிரச்னையால், சமயபுரத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் வியாபாரிகள் இங்கிருந்து மாற்றினால் நாங்கள் விற்பனையே செய்ய மாட்டோம் என அதிகாரிகளை மிரட்ட துவங்கினர், இதன் பிறகு பொன்மலை ஜி. கார்னர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

Advertisment

இங்கு இரவு, 9:00 முதல், அதிகாலை, 4:00 வரை வியாபாரம் நடத்த அனுமதி கொடுத்தனர். ஆனால் இங்கு, மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் சமூக இடைவெளி இல்லாமலும், 'மாஸ்க்' அணியாமலும், ஆயிரக்கணக்கில் கூடி, காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

Advertisment

இதே மாதிரி தான் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து, பலருக்கும் கொரோனா தொற்று பரவியது. அங்கிருந்து ஒரே இரவில் 4000 ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மூலமே தமிழகம் முழுவதும் பல இடங்களில் கரோனோ பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமானது. அதன் பிறகு கோயம்பேடு மார்க்கெட் இழுத்து மூடப்பட்டுள்ளது.

இதே நிலை தான் தற்போது திருச்சி ஜி.கார்னர் சந்தைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜி கார்னர் பகுதிக்கு வந்த வியாபாரிகளுக்கு 170 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 8 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

திருச்சி ஆர்.டி.மலை, எடத்தெரு, தாராநல்லூர், பிச்சைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வந்த வியாபாரிகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

தமிழக முழுவதும் கரோனோ தொற்று பரவ மாவட்டம் தோறும் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் தங்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லாத நிலையிலேயே சமூக விலகளை கடைப்பிடிக்காத நிலையில் தான் இந்த நோய் தொற்று அதிகமாகி உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

gandhi Market
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe