Skip to main content

கோயம்பேடுவை அடுத்து திருச்சி ஜி.கார்னர் காய்கறி சந்தை கரோனா பரவும் மையமா?

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

g

 

திருச்சி மொத்த காய்கறி மார்க்கெட், காந்தி மார்க்கெட்டில் இருந்து, பால்பண்ணை பைபாஸ் ரோடு பகுதிக்கு ஏற்கனவே மாறியது. பின், கரோனா பிரச்னையால், சமயபுரத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் வியாபாரிகள் இங்கிருந்து மாற்றினால் நாங்கள் விற்பனையே செய்ய மாட்டோம் என அதிகாரிகளை மிரட்ட துவங்கினர், இதன் பிறகு பொன்மலை ஜி. கார்னர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

 

இங்கு இரவு, 9:00 முதல், அதிகாலை, 4:00 வரை வியாபாரம் நடத்த அனுமதி கொடுத்தனர். ஆனால் இங்கு, மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் சமூக இடைவெளி இல்லாமலும், 'மாஸ்க்' அணியாமலும், ஆயிரக்கணக்கில் கூடி, காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.


 
இதே மாதிரி தான் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து, பலருக்கும் கொரோனா தொற்று பரவியது. அங்கிருந்து ஒரே இரவில் 4000 ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மூலமே தமிழகம் முழுவதும் பல இடங்களில் கரோனோ பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமானது.  அதன் பிறகு கோயம்பேடு மார்க்கெட் இழுத்து மூடப்பட்டுள்ளது.

 

 
இதே நிலை தான் தற்போது  திருச்சி ஜி.கார்னர் சந்தைக்கு ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையில், ஜி கார்னர் பகுதிக்கு வந்த வியாபாரிகளுக்கு 170 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 8  பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

 

திருச்சி ஆர்.டி.மலை, எடத்தெரு, தாராநல்லூர், பிச்சைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வந்த வியாபாரிகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

 

தமிழக முழுவதும் கரோனோ தொற்று பரவ மாவட்டம் தோறும் உள்ள  காய்கறி மொத்த வியாபாரிகள் தங்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லாத நிலையிலேயே சமூக விலகளை கடைப்பிடிக்காத நிலையில் தான் இந்த நோய் தொற்று அதிகமாகி உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பறிமுதல்! - போலீசார் அதிரடி!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

 Police took action against Gutka, tobacco products were hidden

 

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கக் கூடாது என்று தொடர்ந்து காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தனிப்படை காவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பால்பண்ணை அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, குட்கா, புகையிலை உள்ளிட்டவற்றை தனிப் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

அதில் மொத்தம் இருபத்தி ஏழு மூட்டைகளில் 550 கிலோ அளவுள்ள குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று காவல்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமையாளர் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கிவைத்து இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


 

Next Story

மார்க்கெட்டில் தீ விபத்து; வாகனங்கள் எரிந்து நாசம்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

fire accident on thiruchy market

 

திருச்சி காந்தி சந்தை அருகே உள்ள காலி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் காய்கறி சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டு காய்கறி மூட்டைகள் ஏற்றி இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை அங்கு நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த பழைய மினிவேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

 

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் பழக் கூடைகளை அப்புறப்படுத்தினர். ஆயினும் மளமளவெனப் பரவிய தீயில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. மேலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றும் இந்த விபத்தில் சேதமடைந்தது.