GANDHI JAYANTHI GRAMA SABHA MEETING HELD ON OCT 2

Advertisment

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இன்று (20/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2- ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

திறந்தவெளியில் கூட்டம் நடைபெறுவதையும், கரோனா தடுப்பு விதிப் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.