Advertisment

காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது! 

Gandhi- Award -for Police- Officers

கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாகச்செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு காந்தியடிகள் விருது வழங்க தமிழக அரசு தேர்வு செய்திருக்கிறது. இந்த விருது, குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

Advertisment

சென்னை தெற்கு காவல்துறை மண்டலத்தைச் சேர்ந்த புனித தோமையர் மலை காவல் நிலைய மதுவிலக்குப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, திருச்சி மாவட்டம்-முசிறி மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் லதா, சேலம் மண்டலம் மத்தியப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் செல்வராஜ், விருதுநகர் மாவட்ட திருவல்லிபுத்தூர் தாலுகா காவல்நிலைய தலைமைக் காவலர் சண்முகநாதன், திருவண்ணாமலை மாவட்ட கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜசேகரன் ஆகிய 5 பேரும் காந்தியடிகள் காவல் விருதுக்காக தேர்வாகியுள்ளனர். வருகிற குடியரசு தினத்தன்று இவர்களுக்கான விருதுடன் தலா 40,000 ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படவிருக்கிறது.

Advertisment

gandhi award Tamilnadu govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe