15 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ள விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்றுநர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தை வழிநடத்திய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி.லக்ஷ்மி நாராயணனிடம் பேசிய போது “2004 ஆம் ஆண்டிலிருந்து 15 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் எங்களுக்கு இன்றுவரை பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. தற்போது விளையாட்டு துறையில் 80 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட போதும் எங்களுக்கு அந்த காலியிடங்களில் பணி நிரந்தரம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியபோதும் எங்களது பணி நிரந்தரம் நிலுவையிலேயே உள்ளது. மேலும், 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பணிநிரத்தரத்தில் முறைகேடு இருப்பதாக விஜிலன்ஸ் கமிட்டி ஆய்வுசெய்துவரும் நிலையில் முறைகேடான பணி நிரந்தரங்களைத் தவிர்த்து திறமையான பயிற்றுநர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என நாங்கள் 12 பயிற்றுநர்களும் எங்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களும் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்தார்.