Gambling in the hotel! The police arrested 8 people!

ஓட்டலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அந்த ஓட்டலில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 8 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

Advertisment

விசாரணையில் அவர்கள், உறையூரை சேர்ந்த தங்கவேல், செந்தில்மணி, காளிமுத்து, பன்னீர்செல்வம், மணிகண்டன், சுப்பிரமணி, இப்ராகிம், அறிவழகன் ஆகிய 8 பேர் என தெரியவந்தது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 சீட்டுக்கட்டு, ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மேலும் 8 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.