gajastorm student suicide attempt

கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் ஊருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர் இனியவன். நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர். நிவாரணம் கேட்டு தொடர்ந்து மக்களுடன் இணைந்து அரசை வலியுறுத்தி வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற தொலைக்காட்சிகள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், திடிரென அவர் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட அவர், நிவாரணம் கேட்டு போராடியதற்கு போலீசார் வழக்குப்போட்டு எங்கள் ஊரில் உள்ளவர்களை கைது செய்துள்ளனர். எங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர், தந்தையையும் கைது செய்துள்ளனர். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் நிவாரணம் கேட்பது தவறா என்று கேள்வி கேட்ட அவர், என் சாவுக்கு பின்னர் எங்கள் ஊருக்கு நல்லது நடக்கட்டும் என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த அவரது நண்பர்களை அவரை கண்டுபிடித்து காப்பாற்றியுள்னர். இந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.