ADVERTISEMENT

கரையை கடக்கிறது கஜா 

01:05 AM Nov 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது. நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை கடக்கிறது. இதனால் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது,. மழையும் வீசத்தொடங்கியதால் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. நிலைமையை உணர்ந்து மக்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் கட்டடங்களில் மட்டுமே மக்கள் தங்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கரையை கடக்கத்தொடங்கியுள்ள கஜா, அதிகாலை 3 மணிக்கு முழுவதுமாக வேதாரண்யம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலினால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் காற்று, மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்று, மழையின் காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் பாலமும் மூடப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT