Advertisment

கஜா புயல்! மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மஜக பேரிடர் குழு, முழு வீச்சில் களப்பணியாற்றி வருகிறது.

Advertisment

முதல் கட்டமாக 300க்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள், இப்பணியில் களப்பணியாற்றி வருகிறார்கள்.நேற்று முதல் கட்டமாக 3 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று 5 ஆயிரம் பேருக்கு மஜக சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 10 ஆயிரம் மெழுகுவர்த்திகளும் இதுவரை வினியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் பால் பவுடர்களும் கூடுதலாக வினியோகம் செய்யப்பட உள்ளதுஎன்று மஜகவினர் தெரிவித்துள்ளனர்.

gaja strome Manithaneya Jananayaga Katchi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe