கஜா புயல் - புதுக்கோட்டையில் 12 பேர் பலி

pudukkottai

புதுக்கோட்டையில் கஜா புயல் தாக்கியதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன்னசவாசலில் மண் சுவர் இடிந்து விழுந்ததில் சீத்தாயி, ஆலங்குடி பாச்சிக்கோவட்டையில் ஆஸ்பெட்டாஸ் சீட் விழுந்ததில் ரங்கசாமி, குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த மாரியாயி ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், ஆலங்குடி அருகே பெரியநாயகிபுரத்தில் ஹாலோ பிளாக் சுவர் இடிந்து விழுந்ததில் பூவாயி, ஆலங்குடி அருகே தெற்கு குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், ரத்தினம் கோட்டையைச் சேர்ந்த பொன்னம்மாள், விராமலையைச் சேர்ந்த ஈஸ்வரி, நாகுடி மங்களநாடுவைச் சேர்ந்த காசிநாதன், புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையைச் சேர்ந்த மேகலா, தெற்கு ராயப்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி, மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி, திருமயம் அடுத்த ராங்கியத்தைச் சேர்ந்த கைலாசம் ஆகியோர் உயிரிழந்தனர்.

gaja storm pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe