Skip to main content

கஜா புயல் பாதிப்பு : 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்... ராகவா லாரன்ஸ்... 

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
raghava lawrence



கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகளை கட்டித் தர உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
 

இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.
 

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன் களமிறங்கும் பிரபல நடிகர்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

ks ravikumar directing next movie starring Raghava Lawrence and elvin

 

'ஃபைவ் ஸ்டார் கிரியேக்ஷன்' சார்பாக கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க, ட்ரென்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் தமிழ் படம் இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.