Advertisment

இனி நிவாரணப் பொருட்கள் வந்தால்தான்... எம்எல்ஏவிடம் அதிகாரிகள்...

visit

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நாகப்பட்டிணத்தில் உள்ள அரசினர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Advertisment

நாகப்பட்டினத்தில் உள்ள அரசினர் சேமிப்பு கிடங்கை நாகை எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி இன்று பார்வையிட்டார்.

Advertisment

அங்கு நிவாரணத்திற்காக வந்து சேர்ந்த பொருள்கள், மாவட்டத்தில் உள்ள எல்லா பகுதிகளுக்கும், கலெக்டர் அலுவலக வழிகாட்டல் படி, உரிய முறையில் அனுப்பப்பட்டு விட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள் கூறினர்.

மேலும் தண்ணீர் கேன்களும், பிஸ்கட் போன்ற பொருட்களும் மட்டுமே கொஞ்சம் இருப்பதாகவும், அது தற்போது ஆங்காங்கே பணிபுரியும் மின் வாரிய ஊழியர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறினர்.

இனிமேல் நிவாரண பொருட்கள் வந்தால் மட்டுமே விநியோகிக்க முடியும் என்றும் கூறினர்.

visit tamimmun ansari warehouse storage goverment nagai gaja storm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe