Skip to main content

கஜா புயல் - நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? கருணாஸ் கேள்வி

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
karunas



கஜா புயலின் பாதிப்பில் உணவு குடிநீர் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? என்று எம்.எல்.ஏ., கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அடைந்த துயரம் வரலாறு காணாத சோகம்.
 

இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மரங்கள், ஆடு மாடு கோழி என பல பல்லுயிர்களை  பலிவாங்கியுள்ளது இந்த புயல். பல ஆயிரம் வீடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஒவ்வொரு தெருவிலும் பல வீடுகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. ஒளிவிளக்கு மின் கம்பங்கள் கணக்கிலடங்காத அளவில் சாய்ந்துவிட்டன.
 

மரங்களெல்லாம் பிணங்களைப்போல் கிடப்பதை கண்ணுற்றால் உள்நெஞ்சு பதைபதைக்கிறது. நான்கு நாட்களாக,  மக்கள் இருக்க இடமின்றியும், உடுத்த உடையின்றியும், குடிக்க நீரின்றியும் மின்சாரமில்லாத இரவுகளை கழிக்கின்றனர்; பெருந்துயரத்தோடு தத்தளிக்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டிய பணிகளில் அரசு தவறிவிட்டது.
 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சொல்லிக் போதிய அளவு நிவர்த்திய செய்யப்படவில்லை. இன்னும் பல ஊர்கள் புயல் அடித்த நிலமையிலிருந்து மீளவே இல்லை. தமிழக அரசின் நிவாரணப் பணிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குக் இருப்பதாக தெரியவில்லை.
 

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும்  கடலோரப் பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம், நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், உட்புறப் பகுதியான திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி என கஜா புயலால் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பிற பகுதிகளும், திருச்சி புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான பாதிக்கப் பட்டுள்ளது.
 

புயலோ, மழையோ இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டு அதன் பாதிப்பிலிருந்து  இயல்பு நிலைக்கு அரசால் அதை கொண்டு வரமுடியும் என்பது இயல்பான காரிமில்லைதான் என்றாலும் இத்தகைய சூழலில் அரசு செய்ய வேண்டிய முதன்மையானப் பணிகளை உடனடியாக நிறைவேற்றுவதுதான் மக்கள் கடமையாகும். உணவு மற்றும் குடிநீர் தடையின்றி கிடைக்கச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை இயல்புநிலைக்கு அழைத்து வருவதுதான் அது. ஆனால் அதை அரசு செய்ய தவறிவிட்டது.
 

'கஜா' புயல் தாக்கி 4 நாட்கள் ஆகும் நிலையில் பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ல மக்களுக்கு குடிநீர் உணவு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் போதிய அளவு அக்கறை காட்டாததால் பல இடங்களில் மக்கள் போராடுகின்றனர். இந்த நிலைக்கு மக்கள் சென்றதற்கு தமிழக அரசு வெட்கப்படவேண்டும்.
 

'கஜா' புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினரும், அப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ஊரகப் பகுதிகளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது தான் மிகப்பெரிய மக்கள் சொல்லும் குற்றச்சாட்டு சாலைகள் போக்குவரத்து  சீரமைக்கும் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியான தேவைகளை அரசு செய்ய முன் வரவேண்டும். எல்லாம் சரி செய்வதுபோல பாசாங்கு செய்யக்கூடாது. மக்கள் கோபத்தோடு கொந்தளிக்கின்றனர். அரசு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
 

முதன்மையான நிவாரண பணிகள் நிறைவடைந்ததும், சேதாரத்திற்கான இழப்பீடுகளில் காலம் தாழ்த்தாது அரசு செயல்படவேண்டும். தஞ்சை டெல்டா கடற்கரையோர மாவட்ட மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 இலட்சமும், தஞ்சை உட்புற ஊரகப் பகுதிகளில் உள்ளோருக்கு ஒரு வீட்டுக்கு தலா 5 இலட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.
 

இப்புயலால் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள், ஆடு கோழிகள் என பல இழப்பீடுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அந்த பெரும் இழப்பீட்டை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதே அவர்களுக்கு அரசு செய்யும் முதன்மை கடமையாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.