vee

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவரான பொருட்களில் பாரபட்சமும், முறைகேடும், நடப்பதாககூறி திருவாரூர்அருகே கானூர் ஊராட்சி பொதுமக்கள் கொட்டும்மழையிலும் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

கஜாபுயல் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று,அடிப்படைத்தேவைகளான மின்சாரம், குடிநீர், உணவு, உள்ளிட்ட வசதிகள்கூட இல்லாமல் எட்டு நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான பொதுமக்கள் தவித்துவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் அரசு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டு, நிவாரணம் வழங்கிவருகிறது. இந்தநிவாரணம் வழங்கும் போது பாரபட்சமும் முறைகேடும் நடப்பதாக பெரும்பாலான இடங்களில் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள கானூர் ஊராட்சியில் சரிவரகணக்கெடுப்பு செய்யாமல் ஒரு சிலருக்கும் மட்டும் நிவாரணம் வழங்கி விட்டுமற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்ததாக பொதுமக்கள் ஆவேசமடைந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கானூர் ஊராட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள், கொட்டும்மழையிலும் திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் வட்டாச்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்தின் பிறகே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisment

அதிமுகவினரின் கொள்ளை துவங்கிவிட்டது, என்று கிண்டல் அடிக்கிறார்கள் பொதுமக்கள்.