Advertisment

கஜா புயல், ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்களுக்கிடையே  பள்ளிக்கு கல்வி சீர் கொடுத்த நெடுவாசல் மக்கள்

கடந்த ஆண்டு 196 நாட்கள் வரை ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடிய மக்கள் கடந்த சில மாதங்களாக கஜா புயல் தாக்கத்திலிருந்து மீள போராடி வருகிறார்கள் நெடுவாசல் மக்கள். போராட்டமே வாழ்க்கையாகிப் போனது விவசாயிகளின் வாழ்க்கை. நாம் வாழப் போராடினாலும் நம் பிள்ளைகள் இந்த துயரங்களை மறந்து நல்லா படிக்க வேண்டும் என்று அவர்கள் படிக்கும் அரசு பள்ளிக்கு கடந்த மாதம் மறைந்த தோழர் முத்துக்குமரன் அறக்கட்டளை சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்களும் காலனிகளும் வழங்கினார்கள் இளைஞர்கள். இப்போது நெடுவாசல் கிழக்கு அரசு பள்ளிக்கு தேவையான கற்றல் உபகரணங்களை தென்னங்கன்றுடன் சேர்த்து கிராம மக்கள் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

Advertisment

f

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் கல்வி சீர் வழங்கப்பட்டது. நெடுவாசலில் தென்னை மரங்கள், தேக்கு,பலா, வாழை என விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

Advertisment

இருப்பினும் தொடக்கப்பள்ளியில் 40 மாணவர்கள் பயில்கின்றனர்.

இப்பள்ளியை மேம்படுத்தும் விதமாகவும், புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, குடிநீர்

சுத்திகரிப்பு கருவி, குடம், வாளி, பாய், துடைப்பான், எழுதுபொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் தென்னங்கன்றுகள் நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று வழங்கினார்கள்.

f

கிராம மக்களுடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி தலைமையில் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தெட்சிணாமூர்த்தி, சுந்தராசு ஆகியோர் ஊர்வலமாக சென்று சீர் பொருளை பள்ளி தலைமையாசிரியர் டி.புஷ்பம் மற்றும் உதவி ஆசிரியை முத்துமாரியிடம் வழங்கினார்கள்.

எத்தனை பாதிப்புகள் வந்தாலும் பள்ளிகளுக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றனர்.

gaja neduvasal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe