powercut

Advertisment

கஜா புயல் இன்றிரவு 11.30 மணியளவில், நாகை, பாம்பன் பகுதிகளில்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்றடிக்கும் எனவும், சிலநேரம் 100 கி.மீ. வேகம் வரை கூட செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கரையைக்கடக்கும் இடங்களில் மின் இணைப்பை துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கரையைக் கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.