கஜா புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த வேதநாயகி மனவேதனையில் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாமில் வீடு, உடைமைகளை இழந்த வேதநாயகி தங்கியிருந்தார். வீடு, உடமைகளை இழந்த மன வேதனையில் இருந்தவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மனமுடைந்து திடீரென்று உயிரிழந்தார்.
இதே திருவாரூர் மாவட்டம் கோட்டூர் நிவாரண முகாமில் தங்கியிருந்த கோமாளப்பேட்டை பகுதியை சேர்ந்த பக்கிரியம்மாள் (வயது 65) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நேற்று முன் தினம் காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மேலும் ஒரு பெண் நிவாரண முகாமில் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.