Advertisment

புதிய தென்னை மரங்கள் மாற்று நடவு செய்ய இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும்: வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் 

gaja

Advertisment

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 31 லட்சம் தென்னை மரங்களை நேராக நிமிரத்தி காப்பாற்றுவது கடினம், 5 அல்லது 6 ஆண்டுகள் ஆன மரங்களை நிமிர்த்தி வைத்து 3 மாதங்களில் காப்பாற்ற முடியும் என வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகதுணை வேந்தர் குமார் வியாக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். துணை வேந்தராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்கலை கழக வளர்ச்சிக்கு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய அவர், கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் ஓரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், வேளாண் பல்கலைக்கு சொந்தமான ஆராய்ச்சி மையங்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Advertisment

கைவசம் உள்ள நெல் விதைகள் உடனடியாக புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், டெல்டா மாவட்டங்களில்கஜா புயலால் 31 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன என தெரிவித்தார்.

31 லட்சம் தென்னை மரங்களை நேராக நிமிரத்தி காப்பாற்றுவது கடினம் என தெரிவித்த அவர், 5 அல்லது 6 ஆண்டுகள் ஆன மரங்களை நிமிர்த்தி வைத்து 3 மாதங்களில் காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தார.

புதியதாக 25 லட்சம் தென்னை நாற்றுகள் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவை எனவும் இதனை உற்பத்தி் செய்ய 40 லட்சம் தேங்காய் விதைகள் தேவை எனவும் தெரிவித்தார்.

புதியதாக தென்னை நாற்றுகள் வாங்க கர்நாடக அரசுடன் பேசி வருகின்றோம் என தெரிவித்த அவர், அங்கிருந்து 5 லட்சம் நாற்றுகள் வரை வாங்க முடியும் எனவும் தெரிவித்த துணைவேந்தர் குமார்,கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் நேரடியாக ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

வருங்காலத்தில் புயலால் இதுபோன்ற சேதம் ஏற்படாமல் இருக்க தென்னை நடவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், சாய்ந்து போன 8 ஆண்டுகளுக்கு மேலான தென்னை மரங்களை மீண்டும் காப்பாற்றுவது கடினம் என தெரிவித்த அவர், சாய்ந்த ஓவ்வொரு மரங்களை காப்பாற்ற 500 ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இருந்து ஒரு குழு கஜா புயல் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு சென்று இருக்கின்றது என தெரிவித்த அவர், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கெல்லாம் நர்சரி போட முடியும் என்பதை நேரில் பார்த்து அங்கு நர்சரி அமைக்க இருப்பதாகவும் துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.

10 அல்லது 15 நாட்களில் புதிய தென்னை நாற்று நடவிற்கான பணிகள் துவங்கும் என தெரிவித்த அவர், புயலால் நெல் பாதிப்பு அதிகளவு இல்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாகவும் கூறிய அவர்,வாழைக்கு இன்சூரன்ஸ் செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.

சாய்ந்து போன 31 லட்சம் தென்னை மரங்களுக்கு மாற்றாக புதிய தென்னை மரங்கள் மாற்று நடவு செய்ய இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும் எனவும் வேளாண்மை பல்கலை துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.

gaja storm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe