Published on 22/11/2018 | Edited on 22/11/2018

கஜா புயலின் கோரத்தாண்டவத்தினால் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழியூரில் பயிர்கள் நாசமானதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி சிவாஜி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதே ஒரத்தநாடு அருகே சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தரராசன், கஜாவின் கோரத்தாண்டவத்தினால் தென்னை மரங்கள் நாசமானதைக்கண்டு மனமுடைந்து விஷம் அருந்தி இன்று தற்கொலை செய்துகொண்டார்.
ஒரே நாளில் இரு விவசாயிகள் மரணம் அடைந்திருப்பது ஒரத்தநாடு பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.