Advertisment

நிவாரணப் பொருள் கிடைக்காத விரக்தியில் மின்மாற்றியில் ஏறி மின்கம்பிகளை பிடித்த இளைஞர்

m

மேற்பனைக்காடு கிராமத்தில் புயல் நிவாரணப் பொருள் கிடைக்கவில்லை என்ற விரக்த்தியில் மின்மாற்றியில் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.10 லட்சம் ஓடு மற்றும் கூரை வீடுகள் புயல் பாதிப்பால் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட ஓட்டு வீடு மற்றும் கூரை வீடுகளுக்கு நிவாரணப் பணமும், 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டியும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து வழங்கி வருகிறது. ஆனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று தினசரி போராட்டங்கள் நடந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் மேற்பனைக்காடு கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஆயிரத்தி 100 நபர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வீடுகளை இழந்தவர்கள், மற்றும் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அறந்தாங்கி தாசில்தார் கருப்பையாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைந்த வீடுகளின் படங்களை காட்டி நிவாரணம் கேட்டதுடன் குடும்ப அட்டைகள் உள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உத்தரவாதம் கொடுத்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. என்றார்.

இந்த நிலையில் மேற்பனைக்காடு கிழக்கு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் நீலகண்டன் (28) வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் தனது குடும்பத்திற்கு அரசு நிவாரணப் பொருள் கொடுக்கவில்லை என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டதுடன் அந்த விரக்தியில் வீட்டின் அருகில் உள்ள மின்மாற்றியில் ஏறி மின்கம்பிகளை பிடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி உடல் கருகி படுகாயத்துடன் நீலகண்டன் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உடலில் பலத்த காயத்துடன் நீலகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். நிவாரணப் பொருள் கிடைக்காத விரக்தியில் இளைஞர் மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fire
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe