g

கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயம் உள்பட வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாக நிற்கும் விவசாயிகள் . சுய உதவிக் குழுக்கள் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 6 மாதம் வரை தவணை கட்ட வேண்டாம் என்று ஆட்சியர் கூறியுள்ளார். தொடர்ந்து நுண்கடன் வசூலுக்கு தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் வந்து ஆட்சியர் உத்தரவை மீறி பணம் கட்டச் சொல்லி மிரட்டுவதாக குளமங்கலம், வடகாடு பகுதியில் உள்ள பெண்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த வாரம் விவசாயம், தொழில் சார்ந்த கடன் மற்றும் சுய உதவிக் குழு கடன் மற்றும் வட்டி கட்ட ஒரு வருடம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

Advertisment

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வதந்தி பரவியதால் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு பக்க மனு நகல் ரூ 60 வரை விற்றனர். மாலை வரை இந்த பரபரப்பு காணப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுளார். அந்த அறிக்கையில் விவசாய கடன், சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட கடன்களுக்கு தவனை செலுத்த ஒரு வருடம் முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம் தான் அளிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி அறிவிக்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது வதந்தியே. அதனால் இந்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மனுவோடு ஆட்சியர் அலுவலகம் வந்து அலைய வேண்டாம். மேலும் வீண் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.