k

Advertisment

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஆசை காட்டி மோசடி செய்த மத்திய அரசு நிறுவனமான கெயில் நிறுவனத்தை கண்டித்து கஜா புயல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்நிறுவனத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரத்தில் மத்திய அரசின் சார்பு நிறுவனமான கெயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில கஜா புயல் பாதிக்கப்பட்ட அப்பகுதியில் உள்ள செட்டி சிமிளி, கிருஷ்ணாபுரம், மலையூர், கோட்டகம், அண்ணாநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சோ்ந்த 2500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்போவதாக கூறி கடந்த 15 தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்களின் விவரங்களை கெயில் நிறுவன அதிகாரிகள் பெற்று சென்றுள்ளனர்.

ke

Advertisment

ஆனால் அதன் பிறகு கெயில் நிறுவனம் சார்பில் எந்தவொரு நிவாரண பொருட்களும் வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்களில் சிலர் கெயில் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு முறையான தகவல்களும் வரவில்லை. இதனையடுத்து ஆசை காட்டி மோசம் செய்த கெயில் நிறுவனத்ததை கண்டித்து 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்நிறுவனத்தின் முன்பு முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கெயில் நிறுவனம் நிவாரணம் வழங்கும் வரை சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.