future cm vijay poster goes viral on social media

Advertisment

கடந்த 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜய், தற்போது வரை 30 ஆண்டுகளைதிரையுலகில் கடந்துள்ளதை, அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்தேனி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர், 30 ஆண்டுக்காலம் சினிமா துறையில் சாதித்த விஜய் வரும் 30 ஆண்டுக்காலம் அரசியலிலும்சாதிப்பார் என்றும், நாளைய முதல்வர் விஜய் என்றும் போஸ்டர்கள் ஒட்டி விஜய் அரசியல் களம் காண்பார் என்பதை தொடர்ந்து தெரியப்படுத்தி வருகின்றனர்.

மேலும், ஒரு போஸ்டரில் நாளைய முதல்வர் விஜய் என்றும், புஸ்ஸி ஆனந்த் நாளையஅமைச்சர் என்றும், தேனி மாவட்ட நிர்வாகி நாளைய சட்டமன்ற உறுப்பினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

future cm vijay poster goes viral on social media

Advertisment

இவர்கள் ஒட்டிய போஸ்டர்விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினரின்அரசியல் கனவை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் . தற்போது நிலவிவரும் அரசியல் சூழலில்நாளைய முதல்வர் விஜய் என்றுஒட்டப்பட்ட போஸ்டர்தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.