
‘எனக்கு காது குத்த தளபதி விஜய் பெரியப்பா ஏன் வரல?’ -அடுத்த போஸ்டரில் இடம்பெறும் வாசகம் இதுவாக இருந்தாலும் ஆச்சரியமில்லை.
விஷயம் இதுதான் –
மதுரையில் விஜய் ரசிகர் யாரோ ஒருவரின் குழந்தைக்கு காது குத்து நிகழ்ச்சி 16-ஆம் தேதி நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு, அந்தக் குழந்தையே அழைப்பது போல் ‘தளபதி விஜய் பெரியப்பா வர்ற புதன்கிழமை எனக்கு காதுகுத்து.. மறக்காம வந்திருங்க..’ என்று போஸ்டர் ஒட்டி, விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தனர், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி தளபதி தலைமை மக்கள் இயக்கம்.
வால் போஸ்டரில் அழைப்பு விடுத்தால் விஜய் வந்துவிடுவாரா? போஸ்டர் ஒட்டியவர்களின் நோக்கம் அதுவல்ல! வித்தியாசமாக போஸ்டர் அடித்து வழிப்போக்கர்களைக் கவர வேண்டும். அவ்வளவுதான்!

எது எப்படியோ? விஜய் கையில் அந்தக் குழந்தை இருப்பது போன்ற படத்தைப் போட்டு, சின்னதாக ’பப்ளிகுட்டி’ தேடிக்கொண்டதில், தளபதி மக்கள் இயக்க மாணவரணியினர் சமர்த்தர்களே! இதுவும் ஒருவகையான காது குத்தலே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)