
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவரது மறைவுக்குப்பல்வேறு தரப்புகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமகவின் ராமதாஸ், அமமுகவின் டி.டி.வி. தினகரன், பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பங்காரு அடிகளாரின் மறைவுக்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டுக்கு மேல் சிறப்பாக நடத்தி கல்வி,மருத்துவ சேவைகளை வழங்கியவர். ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறையைப்பழக்கப்படுத்தினார். பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும்' எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)